Thursday, January 8, 2009

நிலாச்சோறு!

எனக்கு பிடித்த மிக சில பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.சுதேசி இந்த படத்தில் வருகிறது இந்த பாடல்.அமெரிக்காவில் நாசாவில் வேலை செயும் ஒரு இந்தியன் தன்னை எடுத்து வளர்த்த பாட்டியை பார்க்க இந்தியாவில் இருக்கும் ஒரு சிறு கிராமத்துக்கு வருகிறான்.அங்கு அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்,பாட்டியின் அன்பு கிராமத்தினரின் வெள்ளந்தி மனது அவனை மாற்றுகிறது.அவன் அமெரிக்கா திரும்ப சென்றும் அவற்றை மறக்கமுடியவில்லை.வேலையை துறந்து அந்த கிராமத்திற்கே திரும்புவதுதான் கதை.ஏனோ படம் சரியாக ஓடவில்லை.இந்த பாடலில் அவனை எதெல்லாம் தாய்நாட்டை நோக்கி அழைக்கிறது என்பதை கவிதை நயத்தோடு சொல்லி இருக்கிறார்கள்."நீதான் தின்ற நிலாச்சோறு உன்னை அழைக்க" என்று ஒரு வரி வரும்.இன்று நகரத்தில் வசிப்பவர்களுக்கு நிலாச்சோறு என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வானளாவிய கட்டடங்களை கட்டி வானத்தையும் வானத்தில் இருக்கும் நிலவையும் மறைத்துவிட்டோம்.என் நினைவு தெரிந்து சிறு வயதில் மின் தடை ஏற்பட்டால் அன்று உணவு மொட்டை மாடியில்தான்.அம்மாவை சுற்றி நாங்களெல்லாம் உட்கார்த்திருப்போம்.அம்மா சோறை உருண்டை பிடித்து கொடுப்பார்கள்.வழக்கமா நான் அதிகமா சாப்பிடுவேன் அதிலும் நிலா சோறு என்றால் இன்னும் அதிகமாக சாப்பிடுவேன்.இப்பொழுது மொட்டைமாடியே இல்லை.குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள் அதுவும் நிலாச்சோறுதான்.இப்பொழுது இருக்கும் குழந்தைகளெல்லாம் நிலா சோறு பற்றித்தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் அதை இழப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.நல்ல வேலை நிலாச்சோறு சாப்பிடும் ஜெனரேஷனில் நான் பிறந்துவிட்டேன்.

No comments: