Thursday, January 22, 2009

Heaven on the Earth!
















அமெரிக்கா வருவதற்கு முன் நம் கண்ணில் ஓடுவது பெரிய கண்ணாடி கட்டிடங்களும், கார்களும், பளபளக்கும் ரோடுகளும்,பப்புகளும், பார்களும்.நானும் அந்த கலர் கனவுகளோடு அமெரிக்காவிற்கு வந்தவன்தான்.இரண்டு வருட அமெரிக்க வாழ்கையில் சில பல சுற்றுலாக்களும் ஆகிவிட்டது. ஆனால் இங்கும் இயற்கையின் அழகு நிறைந்த இடங்கள் உண்டு என்று என்னை உணர வைத்த இடம் Yellow Stone National Park. இது அமெரிக்காவின் முதல் நேஷனல் பார்க். Wyoming Montana,Idaho என மூன்று மாகாணத்தின் எல்லைகளை தன்னுள் அடக்கி அமைந்துள்ளது இது.அருவிகள்,மிக உயர்ந்த மலைகள்,பள்ளத்தாக்குகள்,மிக பிரம்மாண்டமான குளம்(உண்மையில் கடல் போல் இருந்தது),Geisers
எனப்படும் வெந்நீர் சுனைகள் என இயற்கை தன் ராஜ்யத்தை நடத்தியுள்ளது.அங்கு இருந்த நான்கு நாட்களும் நான் உணர்ந்தது ஒன்றுதான் அது "Heaven On the Earth".இதற்குமேல் அதைப்பற்றி நான் எழுதுவதை விட படங்கள் அதை உறுதி செய்யும்.

Thursday, January 8, 2009

நிலாச்சோறு!

எனக்கு பிடித்த மிக சில பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.சுதேசி இந்த படத்தில் வருகிறது இந்த பாடல்.அமெரிக்காவில் நாசாவில் வேலை செயும் ஒரு இந்தியன் தன்னை எடுத்து வளர்த்த பாட்டியை பார்க்க இந்தியாவில் இருக்கும் ஒரு சிறு கிராமத்துக்கு வருகிறான்.அங்கு அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்,பாட்டியின் அன்பு கிராமத்தினரின் வெள்ளந்தி மனது அவனை மாற்றுகிறது.அவன் அமெரிக்கா திரும்ப சென்றும் அவற்றை மறக்கமுடியவில்லை.வேலையை துறந்து அந்த கிராமத்திற்கே திரும்புவதுதான் கதை.ஏனோ படம் சரியாக ஓடவில்லை.இந்த பாடலில் அவனை எதெல்லாம் தாய்நாட்டை நோக்கி அழைக்கிறது என்பதை கவிதை நயத்தோடு சொல்லி இருக்கிறார்கள்."நீதான் தின்ற நிலாச்சோறு உன்னை அழைக்க" என்று ஒரு வரி வரும்.இன்று நகரத்தில் வசிப்பவர்களுக்கு நிலாச்சோறு என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வானளாவிய கட்டடங்களை கட்டி வானத்தையும் வானத்தில் இருக்கும் நிலவையும் மறைத்துவிட்டோம்.என் நினைவு தெரிந்து சிறு வயதில் மின் தடை ஏற்பட்டால் அன்று உணவு மொட்டை மாடியில்தான்.அம்மாவை சுற்றி நாங்களெல்லாம் உட்கார்த்திருப்போம்.அம்மா சோறை உருண்டை பிடித்து கொடுப்பார்கள்.வழக்கமா நான் அதிகமா சாப்பிடுவேன் அதிலும் நிலா சோறு என்றால் இன்னும் அதிகமாக சாப்பிடுவேன்.இப்பொழுது மொட்டைமாடியே இல்லை.குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள் அதுவும் நிலாச்சோறுதான்.இப்பொழுது இருக்கும் குழந்தைகளெல்லாம் நிலா சோறு பற்றித்தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் அதை இழப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.நல்ல வேலை நிலாச்சோறு சாப்பிடும் ஜெனரேஷனில் நான் பிறந்துவிட்டேன்.

Saturday, January 3, 2009

வீட்டில் ஒரு நாள்...

***TUESDAY ***

10 PM

"இப்போ எப்டி இருக்கீங்க?"


"I am ok "


"நாளைக்கு ஆபீஸ் போகணுமா?"


"கண்டிப்பா போகணும்.ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவேன்.நாளைக்கு சமைக்க வேண்டாம்"


ONE HOUR BACK - 9PM

"இப்டி எல்லாரும் ஒண்ணா சாப்டு எவ்வளவு நாள் ஆச்சு" அம்மாவுக்கு சந்தோஷம் புடிபடவில்லை.

"அப்பா இதிலி உத்தி விதுபா",முத்து பற்களோடு பாலா சிரித்துக்கொண்டு இருந்தான்.


"இன்னும் கொஞ்சம் சட்னி போட்டுகோங்க",ராதா


கிட்டத்தட்ட தினமும் கான்டீன்லதான் சாப்பாடு.வாழ்கை வாழறதே ஆபீஸ்லதான்.தூங்கறதுக்கும் குளிக்கிரதுக்கும்தான் வீடா?நம்மல சுத்தி இவ்ளோ எளிமையா இவ்ளோ அழகான விஷயங்கள் நடந்துட்டு இருக்கு.நாம ஏன் இதெல்லாம் இவ்ளோநாள்
பார்க்கல?பார்க்கலையா இல்ல கண்டுக்கலய?நாம இவுங்களுக்காகதான இரவு பகலா work பண்றோம்.இவுங்களுக்காக work பண்றோமா companyகாக work பண்றோமா?அம்மாவையும்,ராதாவையும் இவ்ளோ சந்தோசமா இன்னைக்குதான் பார்க்கிறேன்.பாலாவும் ரொம்ப சந்தோசமா இருக்கான்.அவுங்களுக்கு இதுதான் வேணும்.ஆபீஸ்நா வேலை இருக்கத்தான் செய்யும்.வேலை இருந்தாதான் ஆபீஸ்.வீடையும் ஆபீஸயும் manage பண்ண தெரியலனா அப்புறம் நாமெல்லாம் படிச்சு
என்ன பிரயோஜனம்.I want my family to be happy at the same time I want my company to be profitable.

"பாலா...தூங்கற நேரம் ஆயிடுச்சு அம்மாகூட வா",ராதா


TWO HOURS BACK 7PM

"இந்த கோவில் அம்மன் ரொம்ப சக்தி வாய்த்த அம்மன்.பக்கத்து ஊர்ல இருந்தெல்லாம் இங்க வந்து தரிசனம் பண்ணிட்டு போறாங்க"


"நம்ம வீட்டு பாகத்துல இவ்ளோ அமைதியா அழாக சின்னதா ஒரு கோவிலா" அசோக் பிரமிதிருந்தான்.


பாலா சுத்தி சுத்தி ஓடிவந்து கொண்டிருந்தான்.


"அப்பா இங்க பாரு ஹா ஹா ஹா"


"வீட்டுக்கு போகலாமா? இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச இட்லி",ராதா


TWO HOURS BACK 5 PM

"அப்பா அப்பா" பாலா மழலையில் எழுப்பினான்


"ஒ இவ்வளவு நேரமா உன் மடியிலையா தூங்கினேன்? கொஞ்சம் அசந்துட்டேன்.எழுப்பி இருக்கலாம்லமா?"


அம்மா எதுவும் பேசவில்லை.அமைதியாக இருந்தாள்.ஆனால் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.
"பாலா எப்போ வந்த?ஸ்கூல் முடிஞ்சதா?வா video game விளையாடலாம்."
நேரம் போனதே தெரியலை.பாலா துள்ளி குதித்து கொண்டு இருந்தான்.


"கோவிலுக்கு வரீங்கள?",ராதா


THREE HOURS BACK 2 PM

"ராதா வந்துடாலாடா?"


"அப்போவே வந்துட்டா.கொல்லபுரதுல தொவசுட்டு இருக்கா"

"என்னமா கண் கலங்கற?"


"அசோக்கு உன்கூட நா க டைசியா மனசுவிட்டு பேசினது நீ Engineering முடிக்கிரவரைகும்தாண்டா.அப்போல்லாம் நீ நெறைய கதை,கவிதைகள் எழுதுவ.சிலது பிரசுரம் கூட ஆயிருக்கு.ஒவ்வொன்னபதியும் நாம சமையலறைல
விவாதிப்போம்.இப்போ மந்திரிச்சுவிட்ட மாதிரி காலைல நா கண்ணு முழிக்கிறதுக்கு முன்னாடி போற, நா தூங்கினதுக்கு அப்புறமா வர.எனக்கோ வயசு ஆகுது.தினமும் கொஞ்ச நேரம் அம்மாவுக்காகவும் ஒதுக்குட.ராதா ரொம்ப நல்ல
பொண்ணு.அவ மட்டும் இல்லேன்னா நா எப்பவோ உங்க அப்பாகிட்ட போயிருப்பேன்"

"அம்மா அப்டில்லாம் சொல்லாதம்மா"

"எனக்கு என் பழைய மகன் வேணும்டா",அம்மா கண்ணீரை துடைத்து கொண்டாள்.

"நா எப்பவும் உன் மகன்தாம்மா"அசோக் அதற்குமேல் பேசமுடியவில்லை.அம்மா மடியில் படுத்துக்கொண்டான்.

THREE HOURS BACK 11 AM
"அம்மா அம்மா"..

"ராதா வாசல்ல ஒரு அம்மா வந்திருக்காங்க யாருன்னு பாரு"

"நம்ம பக்கத்து தெருவில இருக்காங்க.வாங்க அம்மா உள்ள வாங்க"

"ஐயா இன்னைக்கு ஆபீஸ் போகலையாம்மா?"

"இல்லம்மா அவருக்கு உடம்பு சரிஇல்ல"

"யாருங்க இந்த சின்ன பொண்ணு?"

"என்னோட பேத்திங்க ஐயா.இந்த வாரமும் அம்மா checkup க்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாக அதான்யா வந்தேன்"

"Checkupஆ என்ன checkup?"

"அந்த பொண்ணுக்கு cancer.என்னோட தோழி Cancer institutela வேலை பாக்கறா.அதான் என்னால முடிஞ்ச உதவி.உங்கிட்ட சொல்லிஇருகேன் மறந்துடீங்கள?சரிங்க நா ஹாஸ்பிடல் வரைக்கும் இவுங்களோட போயிட்டு முப்பது நிமிசத்துல வந்துடறேன்.சாப்பாடு இருக்கு நா வர லேட் ஆயிடுச்சுன்னா சாப்பிடுங்க.அம்மாவையும் சாப்பிட சொல்லிடுங்க",கடகடவென பேசி முடித்தால்.

இவ்வளவுநாளும் இவள் வீட்டில் TV serialதான் பார்கிறாள் என நினைத்துகொண்டிருந்த அசோக் மனைவியை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.அவள் மேல் ஒரு மரியாதை வந்திருந்தது.

THREE HOURS BACK 8 AM

அசோக் கண் விழித்தபோது பாலா ஸ்கூல் uniformல் நின்றுகொண்டிருந்தான்.
"அப்பா ஸ்கூல் பஸ் வர நேரம் ஆயிடுச்சுப்பா.Uniform தத்தை நல்லா இருக்கா?"

"பாலா நீ 1st standard படிக்கற.சட்டைய தத்தைனு சொல்ற."

ராதாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"நா UKG பதிகிறேன்....அமுதா மிஸ்தான் எங்க டீச்சர் தெரியாதா?"

"பாலா பாலா பாலா",ஒரே சத்தம்

"ஸ்கூல் பஸ் வந்துடுச்சு பாரு.நீ கெளம்பு டாடிக்கு bye சொல்லிடு"

"Bye தாதி"


12 HOURS BACK

***MONDAY***

8PM
"இந்த week நம்ம release successfullaஆ finish பண்ணனும்.I expect everybody to be in office on both Saturday and Sunday.இந்த release நாம successfullஆ முடிசிட்டோம்னா clients ரொம்ப சந்தோசபடுவாங்க.That will help us a lot in increasing the business.உங்களுக்கே தெரியும் daily morning 8 O Clock to night 11 O clock வரைக்கும் நா வொர்க் பண்றேன்.I want contribution from everybody.இந்த வருஷம் நம்ம லாபம் போன வருஷத்த விட அதிகமா இருக்கணும்.அதுக்காகத்தான் team leads and mangers உடன் இந்த meeting."


"Mr.அசோக்.......sir...sir..என்ன ஆச்சு............."

"............................................................"

AFTER ONE HOUR 9 PM

"sir..என்ன ஆச்சுங்க அவருக்கு?",ராதா

"Meetingல பேசிக்கிட்டே இருந்தாரு அப்டியே மயங்கி விழுந்துட்டாரு.உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்துட்டோம்.கவலைபடாதீங்க, doctor வராரு"

"ஒண்ணும் கவலைபடாதீங்க restlessஆ work பண்ணதாலதான் இப்டி ஆயிடுச்சு.Nothing to worry.Rest எடுத்தா எல்லாம் சரி ஆயிடும்.இன்னைக்கு Monday, நாளைக்கு ஒரு நாள் வீட்ல ஒய்வு எடுக்கட்டும்.Dont worry"


***WEDNESDAY***

@ office Morning 9 AM
Good Morning அசோக் !

Good Morning!

"இப்போ எப்டி இருக்கீங்க?"

"I am completely a new man."

"நேத்து ஆபீஸ் வராததால நெறைய விஷயங்கள மிஸ் பண்ணிடீங்க."

"நேத்து வீட்ல இருந்ததால நெறைய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்",அசோக்.

"இந்த weekend யாரும் ஆபீஸ் வர வேண்டாம்.Fridayகுள்ள வொர்க்க எப்டி முடிக்கிறதுன்னு strategy plan பண்ணனும்.Let us have a meeting in one hour.பயப்படாதீங்க இனிமே மயக்கம் போட்டு விழமாட்டேன்"

அசோக் சிரித்துக்கொண்டே கணினியை switch on செய்தான்.